நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த டெங்கு நோயாளர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில், 1,228 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்தின் பொரளை, போன்ற இடங்களில் நேற்றைய தினம் (17.01.2024) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் 86,232 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.