ஐ. ஏ. காதிர் கான்
பேராதனைப் பல்கலைக் கழக இஸ்லாமிய நாகரீகத் துறை
முன்னாள் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஐ.எம். அமீன் எழுதிய “சூபிஸம் ஓர் அறிமுகம்” நூல் வெளியீட்டு விழா, கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் ஏற்பாட்டில், முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் வழிகாட்டலில், மௌலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் – காஸிமி (கலீபத்துல்
பாதிபிய்யா – கஹட்டோவிட்ட) தலைமையில் (15) திங்கட்கிழமையன்று, முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இச்சிறப்பு விழா நிகழ்வில் நூலின் முதற்பிரதியை, அல்ஹாஜ் மாஹிர் ஹஸன் (மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகி) பெற்றுக் கொண்டார். நூல் ஆய்வினை, கலாநிதி அஸ்வர் அஸாஹிம்
(பொருளாளர் – அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா) மேற்கொண்டார். இதன்போது, முன்னாள் பிரதித் தேர்தல்
ஆணையாளர் அஷ்ஷேஹ் எம்.எம். முஹம்மத், “கஹட்டோவிட்ட ஊர்” பற்றிய வரலாறை அறிமுகம் செய்து வைத்தார்.
கலாநிதி எம்.ஐ.எம். அமீன் எழுதிய “சூபிஸம் ஓர் அறிமுகம்” என்ற நூலை மையப்படுத்திய இச்சிறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், “முஸ்லிம் சமூகத்தைக் கூறுபோட நினைப்பவர்களுக்கு இந்நூல் தகுந்த பாடம் கற்பிக்கும்” என்ற தொனிப்பொருளில் சிறப்புரை நிகழ்த்தி, வந்நிருந்தோரை சிந்தனையில் ஆழ்த்தினார்.