இஸ்மதுல் றஹுமான்
மக்களின் சமயப் பிரச்சிணைகள் மற்றும் உண்டான கேள்விகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொது மக்களை நேரடியாக சந்திக்க புத்தசாசன கலாச்சார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பதில் பணிப்பாளர் எம்.எல். அலா அஹமட் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்
ஜனவரி 16ம் திகதி முதல் இரண்டு கிழமைக்கு ஒரு முறை ரி. பி.ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டடத் தொகுதியில் காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை புத்தசாசன, கலாச்சார. அமைச்சரை சந்தித்து சமயம் தொடர்பான பிரச்சிணைகளுக்கும் பொதுப் பிரச்சிணைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட பிரச்சிணைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றன.
சகல சமய திணைக்களங்களும் இது தொடர்பாக தத்தமது சமய மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அமைச்சரின் முதலாவது சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது.