ஐ. ஏ. காதிர் கான்
வீட்டு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை குறைக்க, சவூதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், உகண்டா, கென்யா, எத்தியோப்பியா மற்றும் பல நாடுகளில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில், சவூதி அரேபியா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பிலிப்பைன்ஸுக்கு 15,900 முதல் 14,700 சவூதி ரியால்கள்,
இலங்கைக்கு 15,000 முதல் 13,800 சவூதி ரியால்கள்,
பங்களாதேஷுக்கு 13,000 முதல் 11,750 சவூதி ரியால்கள்,
கென்யாவுக்கு 10,870 முதல் 9,000 சவூதி ரியால்கள்,
உகண்டாவுக்கு 9,500 முதல் 8,300 வரை,
எத்தியோப்பியா ஆட்சேர்ப்புக் கட்டணம் 6,900 லிருந்து 5,900 சவூதி ரியால்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த நாட்டு மக்களை வீட்டு வேலையாட்களாக வேலைக்கு அமர்த்துவதில் ஏற்படும் அதிக செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.