2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்தது.
உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் பகுதி 2 வௌிப்படுத்தப்பட்டதை அடுத்து பரீட்சைகள் திணைக்களத்தினால் பரீட்சை ரத்து செய்யப்பட்டு இவ்வருடம் மீள நடாத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதற்கு அமைவாக, பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.