போருவதண்ட, மாப்புட்டுகல , மானெல் உயன பிரதேசத்தை சேர்ந்த கொழும்பு கற்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்த ஹாசினி பாக்யா என்ற மாணவியே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 16.01.2024 செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக கடந்த 5ஆம் திகதி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 11ம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
மாணவியை பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.