2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது.
இந்த பரீட்சையை மீண்டும் மாசி மாதம் முதலாம் திகதி நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் காலை 8.30 முதல் முற்பகல் 11.40 வரையில் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையும் பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையில் முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையும் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.