ஐ. ஏ. காதிர் கான்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல்,
சில வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நுகர்வோரிடமிருந்து 18 சத வீதம் வரை “வற்” வரியை சட்ட விரோதமான முறையில் அறவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், பல முறைப்பாடுகள், பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பற்றுச் சீட்டுக்களில் “வற்” வரிக்கான பதிவு இலக்கத்தைக் குறிப்பிடாது, “வற்” வரி அறவிடப்பட்டால், அது தொடர்பில் நுகர்வோர் தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.
அத்தகைய முறைப்பாடுகளை, உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாகவோ அல்லது [email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அனுப்ப முடியும் எனவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.