தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரலாற்று கதையம்சத்தையும் இப்படத்தில் உள்ளடக்கியுள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் First லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷல் ஆக கங்குவா படத்தின் Second லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரில் இரண்டு கெட்டப்பில் மிரட்டலான லுக்கில் இருக்கிறார் நடிகர் சூர்யா. இதோ அந்த போஸ்டர்..