வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு தொலைக்காட்சிப்பெட்டி களவாடப்பட்டமை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற இவ் திருட்டுச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தி விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2024) மதியம் 3.29 மணியளவில் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது. சிசிரிவி காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியினை விற்பனைக்கு வழங்கியிருந்தமை தெரியவந்தமையையடுத்து சுமார் 8 மணிநேர குறுகிய நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுட்ட வவுனியா சுந்தரபுரம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவிரன்
யாழ்ப்பாணம்