கொழும்பு
இந்த வருடத்தின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . அத்தொகை ஆயிரத்து எழுநூறு ஆகும்
வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை (16ஆம் திகதி) வெளியிடப்படலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.