ஐ. ஏ. காதிர் கான் –
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினால் அரங்கேற்றப்பட்டு வரும் காசா மீதான இன அழிப்புத் தாக்குதல்கள், இன்றுடன் 100 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றன.
இப்பாரிய இன அழிப்பிற்கு எதிராக, உலகம் முழுவதும் பல போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (14) இலங்கையிலும் பாரிய இணையவழிப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஒவ்வொருவரும் பலஸ்தீனத்திற்கு ஆதரவான மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிரான வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாதைகளுடன் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருவதாக, சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.