குடும்பஸ்தர் ஒருவர் வவுனியாவில் போதைப்பொருளுடன் கைது!
வவுனியா புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளின் ஆசனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் 13.01.2024 சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கையில், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஏ9 வீதியூடாக பொல்காவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த குடும்பத்தை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 375 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு குறித்த குடும்பஸ்தரை அதிரடிப்படையினர் கைது செய்து புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொல்காவளை மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரையும் கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புளியங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-யாழ் நிருபர் –