பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
மின் கட்டணம் குறைக்கப்பட்டவுடன், நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. “நீர்க் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.
தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று. எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் கண்டிப்பாக நீர்க் கட்டணம் குறைக்கப்படும் என்றார்.