பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.
நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. அதன் பிறகும், தொடா்ச்சியாக பலமுறை சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 611 போ் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 210 போ் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.