ஐ. ஏ. காதிர் கான்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹத்துடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரி ஒருவர், நேற்று (09) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், விமான நிலையத்தில் வைத்து இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பெண், கட்டுநாயக்கவிலிருந்து மடபாத்தவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் அவரது கழுத்தை அறுத்துள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், வேதர வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவரது உயிர் சம்பவ இடத்திலேயே ஏற்கனவே பிரிந்திருந்தது. 39 வயதான இவர், ஒரு பிள்ளையின் தாயாவார்.
இக்கொலையைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய சந்தேக நபர், நாட்டிலிருந்தும் தப்பிச் செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கஹத்துடுவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.