பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக குறித்த புகையில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளி சரியாக இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும், அதுவரை புகை மூட்டமாக காணப்படுவதால் முகமூடிகளை முறையாக அணிந்து செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த இரசாயன தொழிற்சாலையில் ஆகஸ்ட் 17ம் திகதி இரவு தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.