பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போதுள்ள 450 லங்கா சதொச கிளைகள் இவ்வருடம் 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், சதொச கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் மக்களுக்கு விலையை குறைத்து மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வரி அதிகரிப்பின் காரணமாக பொதுமக்களுக்கு சற்று சுமை கூடியிருக்கும் என்று என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.