ஐ. ஏ. காதிர் கான்
பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார்.
‘தெரண’ தொலைக்காட்சியை நடத்தி வரும் ‘பவர் ஹவுஸ்’ நிறுவனம், ‘அருண’ மற்றும் ‘தமிழன்’ நாளிதழ்களை நடத்தி வரும் ‘லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட 24 நிறுவனங்களில் இருந்து அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.
முழு நேர அரசியலில் பிரவேசித்துள்ள திலித் ஜயவீர, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மவ்பிம ஜனதா’ கட்சியின் தலைவராகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
அதற்கான பிரச்சாரங்களை, அவர் நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ள பின்புலத்திலேயே, தாம் வகித்த அனைத்து தலைவர் பதவிகளையும் இராஜினாமாச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.