இஸ்மதுல் றஹுமான்
27 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவந்தவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த வர்த்தகர் கடந்த 4ம் திகதி அதிகாலை 4.51 மணிக்கு ஓமான் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து ஓ வீ 437 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவரின் பயணப் பொதிகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அவரின் 3 பேக்குகளில் மறைத்துவைத்திருந்த “மென்ஷஸ்டர்” வகை வெளிநாட்டு சிகரட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
135 காட்டூன்களில் 27,120 சிகரட்டுகளும் மேலும் 3 பக்கட்டுகளும் இருந்துள்ளன. இதன் பெறுமதி 27 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது வர்த்தகரை விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.