இஸ்மதுல் றஹுமான்
சுங்க வரி செலுத்தாமல் சட்ட விரோதமா௧ இலங்கைக்கு
கொண்டுவந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்ற 323 கையடக்க தொலைபேசிகளுடன் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கட்டுநாயக்க அதிவேக வீதியில் வைத்து கைது செய்துள்ளனர். அதனை எடுத்துச் சென்ற வாகணத்தையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
இந்த கையடக்க தொலைபேசித் தொகையில் உபயோகிக்காத 246 புதிய தொலைபேசிகளும் வெளிநாட்டில் பாவித்த 77 கையடக்க தொலைபேசிகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொழும்பு நோக்கி பயணிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி வாகணத்தை நிறுத்தி மேற்கோண்ட பரிசோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 21 வயது நபரும் வத்தளையைச் சேர்ந்த 43 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் கைபற்றப்பட்ட தொலைபேசிகளையும், வாகணத்தையும் மேலதிக விசாரணைக்காக பேலியகொடை தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.