ஐ. ஏ. காதிர் கான்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்படும் வகையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் “109” எனும் துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமெனவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.