பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ஈரான் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில் அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்ததில் மேலும் 60 பேர் காயமடைந்ததாக மாநில ஒளிபரப்பாளர் இரிப் கூறினார்.
இது ஒரு “பயங்கரவாத தாக்குதல்” என்று கெர்மனின் துணை ஆளுநரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.