இஸ்மதுல் றஹுமான்
இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட அன்பளிப்பு பார்சலில் 4.091 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை எடுத்துச் செல்ல வந்த முகவர் கைதுசெய்யப்பட்டதாக சிரே்ஷ்ட சுங்க அத்தியட்சகரும் ஊடகம
பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
சீதுவையில் அமைந்துள்ள செரண்டிப் காகோ பயணப்பொதிகள் முனையத்திற்கு கிடைக்கப்பெற்ற
பொதியில் உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் சந்தேகம்கொண்ட கண்காணிப்புப் பிரிவினர் அதனை பரிசோதனைக்காக பிரித்துப் பார்த்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹஷீஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தற்போதைய சந்தைப் பெறுமானம் 61.36 மில்லியன் ரூபா என ஊடகம
பேச்சாளர் கூறினார்.
அந்தப் பார்சலை எடுத்துச் செல்ல வந்த முகவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் இலங்கை சங்கத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு செயல்படுகின்றது. கடந்த வருடம் கண்காணிப்புப் பிரிவினரினால் 8 தடவை 359 மில்லியன் ரூபா பெறுமதியான விச போதைப் பொருள் கைபற்றப்பட்டு அவை நாட்டுக்குள் வருவதை தடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலதிக விசாரணைக்காக போதைப் பொருளையும் சந்தேக நபரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.