ஐ. ஏ. காதிர் கான்
பலஸ்தீனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக, எட்டு குழந்தைகளும் இரண்டு தாய்மார்களும், (02) செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார்கள்.
இவர்களின் இரு தந்தையர்களும், பலஸ்தீனைச் சேர்ந்தவர்கள். தாய்மார் இருவரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இக்குடும்பங்கள், பல வருடங்களாக பலஸ்தீனில் வசித்து வருபவர்கள். அங்கு தற்போது இடம் பெற்று வரும் போர் காரணமாக, பெரும் நெருக்கடிக்கு உள்ளான இவர்கள் தங்களது குழந்தைகளுடன், நாட்டை வந்தடைந்துள்ளார்கள்.
இதேவேளை, இவர்களுடனான ஊடக சந்திப்பு ஒன்றையும் பலஸ்தீன தூதரகம் இன்று (02) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.