பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ரயில், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி, போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நேற்று (01) வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நியாயமான விலைக் கொள்கையை அங்கு ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.