பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் உள்ள கட்டிடங்களைச் சுற்றி சுமார் 3,000 பேரைப் பயன்படுத்தி,
மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் காரணமாக சுமார் 58,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,
அவர்களுக்கு உணவு முதலியன வழங்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.