பிர்தௌசியா அஷ்ரப்
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று(30) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று(31) அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு வடக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவிற்கு வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி இலங்கை உட்பட பல நாடுகளை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.