பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பவரில் முதன்மை பணவீக்கம் 3.4% ஆக பதிவாகியிருந்த நிலையில், டிசம்பரில் அது 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவுப் பணவீக்கம் 2023 நவம்பரில் -3.6% இல் இருந்து 2023 டிசம்பரில் 0.3% ஆக உயர்ந்தது.