ஐ. ஏ. காதிர் கான்
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, நான்கு மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்களும், புதிய இடமாற்றங்களும் நிகழவுள்ளதாக, நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – கிழக்கு மாகாணத்திற்கும்,
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜேகலா மகேஸ்வரன் – வடக்கு மாகாணத்திற்கும், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் – சப்ரகமுவ மாகாணத்திற்கும், நவீன் திஸாநாயக்க – மேல் மாகாணத்திற்கும் ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதுடன், இதில் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.