ஐ. ஏ. காதிர் கான்
2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை, 28 ஆம் 29 ஆம் திகதிகளில் நாடுபூராகவும் நடாத்தப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதோடு, ஜும்ஆவுக்குப் பிறகும் பரீட்சை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, பிற்பகல் 1 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு, அன்றைய தினம் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கு அறிவித்தல் செய்யுமாறு, அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.