பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இறைச்சிக் களஞ்சியத்தை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அதன் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.