தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை, ஒன்பது மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தட்டம்மை தடுப்பூசியை, 6 மாதம் முதல் 9 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு “ஒரு டோஸ்” என்ற அடிப்படையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், கண்டி, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இந்தத் தடுப்பூசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் டொக்டர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடுப்பூசித் திட்டம், ஜனவரி மாதம் 6 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயற்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
December 29, 2023
0 Comment
277 Views