மூதூர் அல்-மினா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு அல்-மினா மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.
மூதூர் அல்-மினா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியையின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
இந்நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் பௌமி, பாடசாலையின் அதிபர் றசீம், பிரதி அதிபர் நிஸார் மௌலவி, முன்பள்ளித் தலைவர் சாதிக், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதியால் பாடசாலைக்கு சில உதவிகள் வழங்கப்பட்டது.