பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று(27) முதல் குறித்த குழு செயற்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹீபால குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பதிவு செய்வதற்கான கால எல்லையைக் கடந்துள்ள மருந்துகளுக்கான காலத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதி வரை நீடித்துள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.