கொழும்பு
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வளாகங்களையும் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்தார்.
“தற்போது தினசரி டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மழைப்பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. நுளம்பு வளர்ச்சிக்கு சாதகமான சூழல் உள்ளது. ஜனவரியில் உயர் தர பரீட்சை ஆரம்பமாகிறது. இதன்படி, தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் அறிவுறுத்தலின்படி, உயர் தரப் பரீட்சைகள் நடைபெறும் பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்பு திட்டம் துரிதமாக இடம்பெறும். இது டிசம்பர் 31க்குள் முடிக்கப்படும்” என்றார்.