பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பண்டிகைக் காலத்தில் இனிப்பு வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக இனிப்பு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை, அரிசி, தேங்காய், எண்ணெய் உள்ளிட்ட இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நத்தார் பண்டிகையின் போது அதிகளவான இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு சடுதியாக விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இனிப்பு வகைகளின் விலைகள்
இதற்கமைய, கொண்டை பலகாரம் 80 ரூபாய்,பயறு பலகாரம் 60 ரூபாய், இனிப்பு முறுக்கு 130 ரூபாய்,கொக்கீஸ் 130 ரூபாய், தேன் குழல் 60 ரூபாய், கேக் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பண்டிகைக் காலங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.