கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய ஆசிரியைகளையும் கௌரவிக்கும் நிகழ்வு கிண்ணியா வலயக் கலவிப் பணிப்பாளர் நசூர்கான் தலைமையில் இன்று (25) சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கிண்ணியாப் பிரதேச செயலாளர் முகம்மது கனி, வலயக் கல்வி அதிகாரிகள், தேசிய காங்கிரஸின் இணைப்பாளர் வைத்தியர் சியா, கிண்ணியா சூராசபைத் தலைவர் பரீத் சேர், கோட்டக் கல்வி அதிகாரி, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது க.பொ. த உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
- ஊடகப்பிரிவு