கொழும்பு
நாடு முழுவதும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை ( 26) 2004 சுனாமி பேரழிவின் 19 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும், இது இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.