- இலங்கையிலும் கொரோனா மரணம் பதிவு
ஐ. ஏ. காதிர் கான்
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் பதிவான கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த மாதத்தில் 52 சத வீதம் அதிகரித்துள்ளன.
இந்த அமைப்பின் கூற்றுப்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் கொவிட் 19 நோயினால், உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 மரணம் ஒன்று, கண்டி தேசிய வைத்தியசாலையில் (23) சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
கம்பளை ஹேத்கல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, (23) நடத்தப்பட்ட பீ.சீ.ஆர். (PCR) பரிசோதனையின்போது, இவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.