ஐ. ஏ. காதிர் கான்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 10 புதிய சட்டத்தரணிகள் “ஜனாதிபதி சட்டத்தரணிகளாக” நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து, பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
அவ்வாறு பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணிகளான
சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட் ஆதம்அலி, ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ், பைஸர் மரிக்கார், கௌசல்யா நவரத்ன, உபுல் குமாரப்பெரும, விரன் கொரியா, எராஜ் டி. சில்வா ஆகிய 10 பேர்களுமே, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.