- பலஸ்தீன இலங்கைத் தூதுவரிடம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
ஐ. ஏ. காதிர் கான்
பலஸ்தீன மக்களுக்காக நான் அன்றும் குரல் கொடுத்தேன். இன்றும் குரல் கொடுப்பேன். இனிமேல் எப்போதும் எனது ஆதரவு பலஸ்தீன மக்களுக்கே என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதுவரை மீண்டும் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.
நான் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் நேசிப்பவன்.
எனது அரசியல் எதிரிகள், உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை வெளியிடலாம். ஆனால், நான் ஒரு நாளும் இனவாதியல்ல. இதேபோன்று, தான் ஒருபோதும் முஸ்லிம் மக்களின் எதிரியுமல்ல.
நான் ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், முஸ்லிம் மக்களையும் நேசிப்பவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
( இன்று இலங்கையிலே பல அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தாலும், தைரியமாக நிமிர்ந்து, “தனக்கு இனிமேலும் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது” என்ற நிலைப்பாட்டை அறிந்தும்,
தனக்கு இருக்கும் சிங்கள பெரும்பான்மை வாக்குகள் சரிந்தாலும் பரவாயில்லை.
“தான் எப்போதும் முஸ்லிம் மக்களின் எதிரி அல்ல” என்பதை, இலங்கைக்கு மட்டுமல்லாது முழு உலகுக்கும், ஒரு அரச தலைவனாக நிமிர்ந்து நின்று கூறியுள்ளதை, இலங்கை முஸ்லிம்கள் பாராட்டி ஆகவேண்டும்.