பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 50 வீதம் குறைவடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிலோ அளவில் கேக் கொள்வனவில் ஈடுபட்டு வந்த வாடிக்கையாளர்கள் இம்முறை கிராம் அளவில் மட்டுப்படுத்தியுள்ளதாக* என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வீடுகளில் கேக் தயாரிக்கும் நடவடிக்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.