பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ஆசிரியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (21) பதிவாகியுள்ளது.
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு,
கைகலப்பாக மாறி ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.