ஐ. ஏ. காதிர் கான்
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை மற்றும் நிலைப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்தும் கால தாமதம் ஏற்பட்டால், ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்’’ என்று, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவில் இதுதெடார்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக, அச்சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் (20) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 1,700 க்கும் அதிகமான விசேட வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள துடன், மேலும் 5,000 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான ஆபத்து நிலைமை உள்ளது.
வைத்தியர்களின் தட்டுப்பாட்டின் காரண மாக 20 இற்கும் அதிகமான சிறியளவிலான வைத்தியசாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், மேலும் 400 இற்கும் அதிகமான வைத்தியசாலைகளும் விசேட வைத்தியப் பிரிவுகளும் முடங்குவதற்கான ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்ட சில பணிப்புறக்கணிப்புகள், இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. எனவே, அதிகாரிகளிடமிருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால், ஜனவரி முதலாம் திகதியிலிருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாகும் என்றார்.