ஐ. ஏ. காதிர் கான்
கொழும்பு – 09, கிளிப்டன் ஒழுங்கையில் (2002 முதல்) நடத்தப்பட்டு வரும் “த்ரீ ஸ்டார்ஸ்” சர்வதேச பாலர் பாடசாலையின் 21 ஆம் வருட கலை விழா மற்றும் பரிசளிப்பு வைபவம் என்பன, கொழும்பு – நகர மண்டபம் (டவுன்ஹோல்) பொது வாசிகசாலை உள்ளரங்கில், (வியாழக்கிழமை) வெகு விமர்சையாக இடம்பெற்றன.
பல் நிபுணத்துவ (Dental therapist) வைத்தியர் ஹெஷானி நிரோதா வன்னி நாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இளஞ்சிறார்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம். முன்ஸிப் நிஸார் வழிகாட்டலில், அதிபர் எப். பzஸ்லியா புகாரி தலைமையில், உதவி ஆசிரியைகளான நுஸ்ரா, நzஸ்னீன், சியானா ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ், இச்சிறப்பு கலை விழா நிகழ்வுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறார்களின் கலை கலாசார நிகழ்வுகள் பலவும் மேடையேற்றப்பட்ட இந்நிகழ்வுகளுக்கு, பெற்றோர்களின் பாரிய பங்களிப்புக்கள் கிடைத்தமைக்கு, அதிபர் பzஸ்லியா இதன்போது நன்றி பாராட்டினார்.