ஐ. ஏ. காதிர் கான்
பிரித்தானிய இளவரசி ஹேன் (Princess Anne), 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 முதல் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இலங்கை அரசாங்கத்தினால் இளவரசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்தே, அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.