- திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும்
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று, அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைவாக தங்கள் பதிவுகளை மேற் கொள்ள முடியும் என, திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரியான
https://muslimaffairs.info/hajjapplications_24/create
ஊடாக பதிவுகளை மேற்கொள்ளலாம் என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல், 2024 இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளோரைக் கேட்டுள்ளார்.
0112667909 – 0112667901 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொள்ள முடியும் என்றும் வேண்டியுள்ளார்.