பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பாகிஸ்தானின் ராஜன்பூர் நகரில் இன்று(18) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 11.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜன்பூரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.