பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
களனிப் பல்கலைக்கழகத்தில் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களனி பல்கலைக்கழக கற்கைகள் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை, விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஏனைய இரண்டு பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்தினாலேயே பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.